இன்ட்லியில் அதிக ஓட்டுக்களை பெறுவது எப்படி?


இன்ட்லியில் அதிக ஓட்டுக்களை பெற விருப்பமா? விரைவாக  இன்ட்லியில் அதிக ஓட்டுக்களை பெறுவதற்கான  சரியான வழிகளை தெரிந்து கொள்ளுங்கள்!

Indli Logoமறுக்கமுடியாதபடி இன்ட்லி தமிழ் தளம் உங்கள் பதிவுகளுக்கான வாசகர்களை அதிகரிப்பதற்கான எளிதான வழியாகும்.இன்ட்லியில் அதிக ஒட்டுக்களை பெறுவதற்கான சுலபமான ஆனால் சிறந்த‌‌ வழிகளை இங்கு காண்போம்

  • அதிகம் பார்க்கப்படும் பதிவு பகுதிகள்
  • கவர்ச்சியான (அ) கவனத்தை ஈர்க்கும் தலைப்புகள்
  • பதிவிடுவதற்கான சிறந்த நேரம்
  • பதிவுபெட்டியினை  இணைத்தல்
  • தொடர்பவர்களை அதிகப்படுத்துதல்
  • நண்பர்களை அழைத்தல்

அதிகம் பார்க்கப்படும் பதிவு பிரிவுகள்
இன்ட்லி தளத்தில் செய்திகள்,இலங்கை,சினிமா,தொ.நுட்பம்,நகைச்சுவை,படைப்புகள் என ஆறு விதமான பகுதிபிரிவுகள் இருந்த போதிலும் வாசகர்களால் அதிகம் விரும்பி படிக்கப்படுவதுமான பிரிவுகளான சினிமா மற்றும்  செய்திகள் பகுதியில் பதிவுகள் இடுவது உங்கள் பதிவிற்கு விரைவான வாசகர்களை கொண்டுவரும் என்பதோடு உங்கள் பதிவு ஓட்டுக்களை அதிகரிக்கவும் உதவும்.

கவர்ச்சியான (அ) கவனத்தை ஈர்க்கும் தலைப்புகள்
இன்று இருக்கும் அவசர உலகில் பெரும்பாலான இன்ட்லி வாசகர்களுக்கு அனைத்து பதிவுகளையும் பார்வையிடுவதற்க்கு நேரம் கிடைப்பதில்லை. ஆகவே உங்கள் பதிவுகளின் தலைப்புகள்  வாசகர்களின் கவனத்தை எளிதில் ஈர்க்கும்படி இருத்தல் அவசியம்.
வினா எழுப்பும் விதமான‌ பதிவு தலைப்புகள்
உ.ம் : இன்ட்லியில் அதிக ஓட்டுக்களை பெறுவது எப்படி?
எண்ணிக்கை அடிப்படையில் அமைக்கப்பட்ட பதிவுகள்
உ.ம்  : இணையத்தில் எளிதில் பணம் சம்பாதிக்க பத்து சிறந்த வழிகள்!
சிறந்த வார்த்தைகளை பயன்படுத்துதல்
வார்த்தைகளுக்கு தனிப்பட்ட வலிமை உண்டு! அவ்வாறான வார்த்தைகளை தேர்ந்தேடுத்து  உங்கள் பதிவு தலைப்புகளின் சரியான இடங்களில் பயன்படுத்துவது சிறந்த  பலனைத்தரும்
உதாரண வார்த்தைகள் : சிறந்த,வலிமையான, நீளமான, உயரமான, நீடித்த …

பதிவிடுவதற்கான சிறந்த நேரம்
நீங்கள் சரியான நேரத்தில் உங்கள் பதிவுகளை இடாவிட்டால் உங்கள் பதிவுகள் அதிக வாசகர்களின் பார்வைக்கு கிடைக்காமல் சென்று விடலாம். ஆகவே வாசகர்கள் அதிகம் இணைப்பில் இருக்கும் நேரத்தில் பதிவிடுவது நல்லது.இதுவரை கிடைத்த தகவல்கள் படி காலையின் முற்பகுதியிலும் ,மாலையின் பிற்பகுதியும் இதற்கான சிறந்த நேரம் என தெரியவருகிறது.

பதிவுபட்டையை சரியானபடி  இணைத்தல்
உங்கள் வலைத்தளத்தில் இண்டிலி பதிவுப்பெட்டியை இணக்காமல் விட்டுவிட்டால்
உங்கள் வாசர்களின் ஓட்டுக்களை நீங்கள் இழக்க நேரிடலாம். ஆகவே பதிவுப்பெட்டியை உங்கள் தளப்பதிவினில் சரியானபடி இணைத்து வாசகர்கள் எளிதில் ஒட்டளிக்கும் வாய்ப்பினை தவறாமல் அளிக்கவும்.

தொடர்பவர்களை அதிகப்படுத்துதல்
இன்ட்லி உங்களை தொடர்பவர்கள் வசதியினை அளிக்கிறது.இவ்வசதியினை சிறப்பாக பயன்படுத்தி உங்கள் தொடர்பவர்களை அதிகரிப்பதன் மூலம் உங்கள் பதிவுகளை எளிதில் பிரபலபடுத்த முடியும்.

படங்கள் மற்றும் வீடியோக்கள் பயன்பாடு
படங்கள் மற்றும் வீடியோக்கள் வாசகர்களின் கவனத்தை எளிதில் ஈர்ப்ப்பதோடு மட்டுமல்லாமல் உங்கள் வாசகர்களுக்கு எளிதில் விளங்கிகொள்ளவும் உதவும் என்பதால் தேவையான இடங்களில் சரியான இத்தகவல்களை பயன்படுத்தலாம்.

நண்பர்களை அழைத்தல்
உங்கள் பதிவுகளுக்கான ஓட்டுக்களை அதிகரிக்க நீங்கள் உங்கள் நண்பர்களை உங்கள் பதிவுற்க்கு வருகை தருமாறு அழைக்கலாம் . திறம்பட பயன்படுத்தினால் இது அதிக பலனளிக்கும் வழியாகும்.

ஒட்டளிப்பதை நினைவூட்டல்
உங்கள் பதிவின் நிறைவாக உங்கள் வாசகர்களை ஓட்டளிக்க வேண்டுகோள் வைப்பதன்  மூலமாக உங்கள் வாசகர்களை மறவாமல் ஓட்டளிக்க  நினைவுறுத்த முடியும்!

பதிவுகளின் தரம் மற்றும் சிறப்பம்சம்
எல்லாவற்றுக்கும் மேலாக பதிவுகளின் தரம் மற்றும் சிறப்பம்சங்களே ஓட்டு எண்ணிக்கையை நேர்மறையாக அதிகரிக்கச் செய்யும்.  பயனுள்ள தகவல்கள் மற்றும் சிறம்சங்கள் வாய்ந்த பதிவுகள்  வாசகர்களால் தாமாகவே ஒட்டளிக்க தூண்டுகோலாக அமையும் என்பதலால் பதிவுகளின் தரத்தில் கவனம் செழுத்துதல் நலம்!

[stextbox id="info" caption="இப்பதிவினை பகிர்ந்து கொள்ளுங்கள்!"]நண்பர்களே! இந்த பதிவினை பிரபலமான உங்கள்  சமுக வலைதளங்களில் பகிர்ந்து கொள்வதன் மூலம் இது போன்ற பதிவுகளை  வரும்காலத்தில் உங்களுக்கு வழங்க எங்களை நீங்கள் ஊக்கப்படுத்தலாம். நன்றி!

தளஅறிமுகம்
முற்றம் தமிழ் ட்விட்டர் தளம்

[/stextbox]

 


இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்

அனைவருக்கும்   இதயம் கனிந்த பொங்கல் ‍‍ தமிழர் திருநாள் வாழ்த்துக்கள்!


  • கதிரவன் ஒளியும்
  • கரும்பின் இனிமையும்
  • பெற்றோர்களின் ஆசியும்

உங்கள் வாழ்வில் சேர்ந்திடவும் வாழ்த்துக்கிறோம்

சாதி மத வேறுபாடில்லாது அனைத்து தமிழர்களும்  கொண்டாடும் தமிழர் திருநாள் வாழ்க வாழ்கவே!

Tamil Twitter Service Mutram.com

Looking for Tamil twitter service where you can post your tweets in Tamil? Mutram.com is the right place to get started!

முற்றம் தளத்தின் ட்விட் செய்யும் பகுதி

Mutram.com is the exclusive Tweet service dedicated for Tamil people those who wishes to post theier tweets in Tamil language. Mutram is completely Tamil based service where you can

  • Find similar Tamil Tweeters
  • Find the Tamil Tweets
  • Invite your friends to  follow you
  • Share not only content but also your images and videos
  • Create and manage the groups

And much more colorful features waiting to explore!
Mutram is 100% free to use . Join Now with Mutram and get start to  tweet in Tamil!

தொழில் நுட்பம் சார்ந்த மாதஇதழ்களை முற்றிலும் இலவசமாக பெற்றிட‌

துறைசார்ந்த அறிவினை பெருக்கிக்கொள்வதற்கு குறிப்பிட்ட‌தொழில் நுட்பம் சார்ந்த வெளியீடுகளை தொடர்ந்து படிப்பது மிகவும் சிறந்தவழியாகும் என்பது தாங்கள் அறிந்ததே! அதுவும் இத்தகைய சிறப்புவாய்ந்த புத்தகங்கள் முற்றிலும் இலவசமாக கிடைக்குமாயின் அது மகிழ்சிக்குறியது தானே!

( முற்றம்.காம்( mutram.com)‍‍ ‍ தமிழுக்கான ட்விட்டர் இணையதளம் ,கனடா நாட்டை சேர்ந்த ‍னெட்லைன் நிறுவனத்துடன் இணைந்து நமது தமிழ் வாசகர்களுக்கு தொழில் நுட்பம் சார்ந்த மாதஇதழ்கள் ( Printed Magazines) ,தொழில் நுட்ப குறிப்புகள்( Technology Whitepapers) மற்றும் மின்னூல்கள் ( Eboஒக்ச்), ஆகியவற்றை முற்றிலும் இலவசமாக வழங்கிவருகிறது.

இச்சேவையின் மூலம் வாசகர்கள் மருத்துவம்,கணிணி தொழில் நுட்பம்,கல்வி,உணவு,வணிகம் உட்பட 30 க்கும் மேற்பட்ட துறை சார்ந்த‌ 300க்கும் மேற்பட்ட நூல்களில் இருந்து தங்களுக்கு தேவையான நூலினை பெற முடியும்.

நூலினை பெற அத்துறைசார்ந்த விண்ணப்பங்களை இணையத்தில் நிரப்பி அனுப்புவது ஒன்றே போதுமானது. விண்ணப்பங்கள் வெற்றிகரமாக அனுப்பட்ட சில நாட்களுக்குப்பின் நூல்கள் விண்ணப்பத்தில் குறிப்பிட்ட முகவரிகளுக்கு தவறாமல் வந்து சேரும்.

கனடா நாட்டில் வசிப்பவர்கள் நூலினை பெற‌

மெக்ஸிகோ நாட்டில் வசிப்பவர்கள் நூலினை பெற‌
ஏனைய நாடுகளில் வசிப்பவர்கள் நூலினை பெற ( இந்தியா உட்பட அனைத்து நாடுகளுக்கும்)

எங்கள் பதிவுகள் உங்களுக்கு பிடித்திருக்குமாயின் கீழ்கண்ட இணையதளங்களில் எங்கள் பதிவுகளுக்கு உங்கள் ஓட்டினை தவறாது பதிவு செய்யுங்கள். இதை செய்வதன் மூலம் நீங்கள் இப்பயனுள்ள செய்திகள் நிறைய தமிழ் வாசகர்களை சென்றடைய உதவுவதுடன் , வரும்காலத்தில் நிறையபதிவுகளை உங்கள் பார்வைக்கு அளித்திட எங்களை ஊக்குவிப்பதாகவும் அமையும். நன்றி!

சரியான இணையதள சேவை நிறுவனத்தை கண்டறியும் வழிகள்

Media Hosting company logo.

Image via Wikipedia


தினமும் புதிதுபுதிதாய் தோன்றிவரும் இணையம் தொடர்பான நிறுவனங்களால்  நல்லதொரு தளசேவை (Hosting Services)

வழங்குபவர்களை கண்டறிவதே பெரும் சிரமமான விடயமாக மாறி வருகிறது!.

தினமும் ஆயிரக்கணக்கான அப்பாவிகள் தவறான சேவைவழங்குபவர்களை தேர்ந்த்தெடுப்பதன் மூலம் அசெளகரியமான மற்றும் வெறுக்கத்தக்க இணையதள அனுவங்களை பெற்று வருவது தெரிந்ததே! சரி!  அப்படியானால் சரியான அல்லது உண்மையான தளசேவை வழங்குபவர்களை  எப்படி கண்டறிவது என்பது உங்கள் கேள்வியா? அப்படியென்றால் இந்த  ஆலோசனைகளை உங்களுக்கானது.

உண்மையான தளசேவை வழங்குபவர்களை கீழ்கண்ட வழிகளின் வாயிலாக கண்டறியலாம்.

தளசேவை வழங்குபவரின் பின்புலம்

தளசேவை வழங்குபவர் எத்துனை காலமாய்  குறிப்பிட்ட இத்துறையில் இடுபட்டுள்ளார்? தளசேவை வழங்குபவர் மூன்றாண்டுகளுக்கு மேல் சேவை வழங்கிவருபவராயின்  அந்நிறுவனமானதுநல்ல முறையில் இயங்கிவரும் நிறுவனம் என்பதற்கு முதல் அடையாளம் ஆகும்! பெரும்பாலான நிறுவனங்கள் தங்கள் நிறுவனம் சார்ந்த  செய்திகளை தங்கள் இணையதளத்தின் ” profile Info”  பகுதியில்  பார்வைக்கு தந்து இருப்பார்கள்.  இதனை நீங்கள் பயன்படுத்திக்கொள்ளலாம்.

தளசேவை வழங்குபவரின் உறுதிமொழி

நம்பகமான  தளசேவை வழங்கும் நிறுவனங்கள் பல ” பணம் திரும்பப்பெறும் வசதியினை” அளிக்கின்றன.  இந்த வசதியின் மூலம் குறிப்பிட்ட நிறுவனங்களின் சேவையில் நீங்கள்  திருப்தி அடையவில்லை என்றால் குறிப்பிட்ட சேவைகாலத்தில் நீங்கள் தள பதிவேற்றத்திற்கு செலவிட்ட முழுமையான தொகையையும் திரும்பபெற முடியும்

சேவை வழங்கும் வழிமுறைகள்

தளசேவை வழங்குபவர் எத்துனை உபயோகமான வழிகளில் தங்களுடைய வாடிக்கையாளர்களுக்கு சேவைபுரிகிறார்? இந்த அம்சமானது மிகவும் முக்கியமான விடயமாகும்   தொடர்ந்து மாறிவரும் தொழி நுட்பங்களுக்கு ஏற்ப தளத்தினை மேம்படுத்திடவும், தளத்தொடர்பினில்   பிரச்சனை ஏற்படும்   நெருக்கடியான நேரங்களில் எளிதாகவும் ,விரைவாகவும் தொடர்புகொள்ளக்கூடி சேவை மிக அவசியமாகும். தளசேவையினை பெறும் முன் அவர்களை தொடர்பு கொண்டு  உங்கள் சந்தேகஙகளை தீர்த்துக்கொள்ளுங்கள் இதன் மூலம்  சேவைவழங்குபவரின் அணுகுமுறை, தொடர்புகொள்ள எடுத்துக்கொள்ளும் நேரம்,  துறைசார்ந்த பட்டறிவு ஆகியவற்றை அறிந்து கொள்ளமுடியும்.

வாடிக்கையாளர்கள் கூறுவது என்ன?

தளசேவை வழங்குபவர் பற்றி அவர்களின் முன்னாள் மற்றும் இந்நாளைய வாடிக்கையாள‌ர்கள் கூறுவதை கவனத்துடன் உற்று நோக்குங்கள்

இத்தகைய தகவல்களை தளசேவை வழங்குபவரின் Testimonial

பக்கத்தினிலும் அல்லது Forum ,Third party Review sites

போன்றவற்றின் மூலமும் அறிந்து கொள்ள முடியும்.

வியாபார நன்னெறி

தளசேவை வழங்குபவர் எத்தகய வியாபார நன்னெறி ( Business Ethics)பின்பற்றுபவராக இருக்கிறார் என்பது மிகவும் அவசியமான ஒன்று! மற்ற எல்லா அம்சங்களிலும் சிறப்பாக செயல்படக்கூடிய  சேவை நிறுவனம் ஒன்று இந்த குறிப்பிட்ட அம்சத்தில் குறைபாடு இருப்பவராயின் அதன் வாடிக்கையாளர்கள் வெகுவாக பாதிக்கப்படுவார்கள்.

உதாராணமாக

  • மறைமுக கட்டணங்கள்
  • அதீத சேவைவரிகள்
  • சிக்கலான மற்றும் பின்பற்ற இயலாத‌ நடைமுறைகள்
  • தவறான மற்றும் சாத்தியமல்லாத வாக்குறுதிகள்

போன்றவை “வியாபார நன்னெறியை” மீறுபவர்களின்  அப்பட்டமான அடையாளங்கள் ஆகும்

இதற்கு மாறாக

  • வெளிப்படையான கட்டணங்கள்
  • குறைந்த அளவிலான சேவைகட்டணங்கள்
  • தேவையான மற்றும் பின்பற்றக்கூடிய நடைமுறைகள்

ஆகியவை “வியாபார நன்னெறியை”பின்பற்றகூடிய நிறுவனங்களின் அடையாளம் ஆகும்!

விற்பனைக்கு  பிந்தைய சேவை
நிறைவாக நீங்கள்  சேவை பெற விரும்பும் நிறுவனம் நீங்கள் விரும்பும் சேவையை “விற்பனைக்கு  பிந்தைய காலத்திற்குபின்னு” தரக்கூடிய நிறுவனமா என்பதை உறுதிசெய்து கொள்ளுங்கள்! எனைன்றால் பல நிறுவனங்கள்  விற்பனை முடிந்தபின் தங்கள் சேவை முடிந்துவிட்டது எனக்கருதுபவர்களும் உண்டு.

சரி. குறிப்பிட்ட நிறுவனங்களின் விற்பனைக்கு  பிந்தைய சேவை பற்றி எப்படி தெரிந்துகொள்வது எப்படி?
இதற்கு அவர்களின் வாடிக்கையாளர்களை தொடர்புகொண்டு  அவர்களின் சேவையை அறிந்து கொள்வது சிறந்த வழியாகும்

உங்கள் கவனத்திற்கு!

கட்டுரையாளரான நான்(  M.Sakthi Ganesh)  இணைய  தளசேவையினை கடந்த மூன்றாண்டுகளாக நடத்தி வருகின்றேன்.  ( ஆகவே தான் இது குறித்த ஆலோசனைகளை என்னால் கொடுக்க முடிந்தது) இணைய  தளசேவையினை  பெற    விரும்புகின்ற வாசகர்கள் எங்களது   சேவையினையும் இக்கட்டுரைகளின் ஆலோசனைகளோடு ஒப்பீடு செய்து ,விருப்பம் இருப்பின் தொடர்பு கொள்ளலாம்.

எங்கள் நிறுவன முகவரி
http://inventran.com

எங்கள் இணையதள சேவையின் சிறப்பம்சங்கள்

http://inventran.com/why-choose-our-web-hosting-service
எங்கள் இணைய  தளசேவை விவரங்கள் மற்றும் கட்டணங்கள் பற்றிய முகவரி
http://inventran.com/cheap-linux-hosting-plans

Sakthi Ganesh M
Mobile : +91 9994833115

எங்கள் பதிவுகள் உங்களுக்கு பிடித்திருக்குமாயின் கீழ்கண்ட இணையதளங்களில் எங்கள் பதிவுகளுக்கு உங்கள் ஓட்டினை தவறாது பதிவு செய்யுங்கள். இதை செய்வதன் மூலம் நீங்கள் இப்பயனுள்ள செய்திகள் நிறைய தமிழ் வாசகர்களை சென்றடைய உதவுவதுடன் , வரும்காலத்தில் நிறையபதிவுகளை உங்கள் பார்வைக்கு அளித்திட எங்களை ஊக்குவிப்பதாகவும் அமையும். நன்றி!