சரியான இணையதள சேவை நிறுவனத்தை கண்டறியும் வழிகள்

Media Hosting company logo.

Image via Wikipedia


தினமும் புதிதுபுதிதாய் தோன்றிவரும் இணையம் தொடர்பான நிறுவனங்களால்  நல்லதொரு தளசேவை (Hosting Services)

வழங்குபவர்களை கண்டறிவதே பெரும் சிரமமான விடயமாக மாறி வருகிறது!.

தினமும் ஆயிரக்கணக்கான அப்பாவிகள் தவறான சேவைவழங்குபவர்களை தேர்ந்த்தெடுப்பதன் மூலம் அசெளகரியமான மற்றும் வெறுக்கத்தக்க இணையதள அனுவங்களை பெற்று வருவது தெரிந்ததே! சரி!  அப்படியானால் சரியான அல்லது உண்மையான தளசேவை வழங்குபவர்களை  எப்படி கண்டறிவது என்பது உங்கள் கேள்வியா? அப்படியென்றால் இந்த  ஆலோசனைகளை உங்களுக்கானது.

உண்மையான தளசேவை வழங்குபவர்களை கீழ்கண்ட வழிகளின் வாயிலாக கண்டறியலாம்.

தளசேவை வழங்குபவரின் பின்புலம்

தளசேவை வழங்குபவர் எத்துனை காலமாய்  குறிப்பிட்ட இத்துறையில் இடுபட்டுள்ளார்? தளசேவை வழங்குபவர் மூன்றாண்டுகளுக்கு மேல் சேவை வழங்கிவருபவராயின்  அந்நிறுவனமானதுநல்ல முறையில் இயங்கிவரும் நிறுவனம் என்பதற்கு முதல் அடையாளம் ஆகும்! பெரும்பாலான நிறுவனங்கள் தங்கள் நிறுவனம் சார்ந்த  செய்திகளை தங்கள் இணையதளத்தின் ” profile Info”  பகுதியில்  பார்வைக்கு தந்து இருப்பார்கள்.  இதனை நீங்கள் பயன்படுத்திக்கொள்ளலாம்.

தளசேவை வழங்குபவரின் உறுதிமொழி

நம்பகமான  தளசேவை வழங்கும் நிறுவனங்கள் பல ” பணம் திரும்பப்பெறும் வசதியினை” அளிக்கின்றன.  இந்த வசதியின் மூலம் குறிப்பிட்ட நிறுவனங்களின் சேவையில் நீங்கள்  திருப்தி அடையவில்லை என்றால் குறிப்பிட்ட சேவைகாலத்தில் நீங்கள் தள பதிவேற்றத்திற்கு செலவிட்ட முழுமையான தொகையையும் திரும்பபெற முடியும்

சேவை வழங்கும் வழிமுறைகள்

தளசேவை வழங்குபவர் எத்துனை உபயோகமான வழிகளில் தங்களுடைய வாடிக்கையாளர்களுக்கு சேவைபுரிகிறார்? இந்த அம்சமானது மிகவும் முக்கியமான விடயமாகும்   தொடர்ந்து மாறிவரும் தொழி நுட்பங்களுக்கு ஏற்ப தளத்தினை மேம்படுத்திடவும், தளத்தொடர்பினில்   பிரச்சனை ஏற்படும்   நெருக்கடியான நேரங்களில் எளிதாகவும் ,விரைவாகவும் தொடர்புகொள்ளக்கூடி சேவை மிக அவசியமாகும். தளசேவையினை பெறும் முன் அவர்களை தொடர்பு கொண்டு  உங்கள் சந்தேகஙகளை தீர்த்துக்கொள்ளுங்கள் இதன் மூலம்  சேவைவழங்குபவரின் அணுகுமுறை, தொடர்புகொள்ள எடுத்துக்கொள்ளும் நேரம்,  துறைசார்ந்த பட்டறிவு ஆகியவற்றை அறிந்து கொள்ளமுடியும்.

வாடிக்கையாளர்கள் கூறுவது என்ன?

தளசேவை வழங்குபவர் பற்றி அவர்களின் முன்னாள் மற்றும் இந்நாளைய வாடிக்கையாள‌ர்கள் கூறுவதை கவனத்துடன் உற்று நோக்குங்கள்

இத்தகைய தகவல்களை தளசேவை வழங்குபவரின் Testimonial

பக்கத்தினிலும் அல்லது Forum ,Third party Review sites

போன்றவற்றின் மூலமும் அறிந்து கொள்ள முடியும்.

வியாபார நன்னெறி

தளசேவை வழங்குபவர் எத்தகய வியாபார நன்னெறி ( Business Ethics)பின்பற்றுபவராக இருக்கிறார் என்பது மிகவும் அவசியமான ஒன்று! மற்ற எல்லா அம்சங்களிலும் சிறப்பாக செயல்படக்கூடிய  சேவை நிறுவனம் ஒன்று இந்த குறிப்பிட்ட அம்சத்தில் குறைபாடு இருப்பவராயின் அதன் வாடிக்கையாளர்கள் வெகுவாக பாதிக்கப்படுவார்கள்.

உதாராணமாக

  • மறைமுக கட்டணங்கள்
  • அதீத சேவைவரிகள்
  • சிக்கலான மற்றும் பின்பற்ற இயலாத‌ நடைமுறைகள்
  • தவறான மற்றும் சாத்தியமல்லாத வாக்குறுதிகள்

போன்றவை “வியாபார நன்னெறியை” மீறுபவர்களின்  அப்பட்டமான அடையாளங்கள் ஆகும்

இதற்கு மாறாக

  • வெளிப்படையான கட்டணங்கள்
  • குறைந்த அளவிலான சேவைகட்டணங்கள்
  • தேவையான மற்றும் பின்பற்றக்கூடிய நடைமுறைகள்

ஆகியவை “வியாபார நன்னெறியை”பின்பற்றகூடிய நிறுவனங்களின் அடையாளம் ஆகும்!

விற்பனைக்கு  பிந்தைய சேவை
நிறைவாக நீங்கள்  சேவை பெற விரும்பும் நிறுவனம் நீங்கள் விரும்பும் சேவையை “விற்பனைக்கு  பிந்தைய காலத்திற்குபின்னு” தரக்கூடிய நிறுவனமா என்பதை உறுதிசெய்து கொள்ளுங்கள்! எனைன்றால் பல நிறுவனங்கள்  விற்பனை முடிந்தபின் தங்கள் சேவை முடிந்துவிட்டது எனக்கருதுபவர்களும் உண்டு.

சரி. குறிப்பிட்ட நிறுவனங்களின் விற்பனைக்கு  பிந்தைய சேவை பற்றி எப்படி தெரிந்துகொள்வது எப்படி?
இதற்கு அவர்களின் வாடிக்கையாளர்களை தொடர்புகொண்டு  அவர்களின் சேவையை அறிந்து கொள்வது சிறந்த வழியாகும்

உங்கள் கவனத்திற்கு!

கட்டுரையாளரான நான்(  M.Sakthi Ganesh)  இணைய  தளசேவையினை கடந்த மூன்றாண்டுகளாக நடத்தி வருகின்றேன்.  ( ஆகவே தான் இது குறித்த ஆலோசனைகளை என்னால் கொடுக்க முடிந்தது) இணைய  தளசேவையினை  பெற    விரும்புகின்ற வாசகர்கள் எங்களது   சேவையினையும் இக்கட்டுரைகளின் ஆலோசனைகளோடு ஒப்பீடு செய்து ,விருப்பம் இருப்பின் தொடர்பு கொள்ளலாம்.

எங்கள் நிறுவன முகவரி
http://inventran.com

எங்கள் இணையதள சேவையின் சிறப்பம்சங்கள்

http://inventran.com/why-choose-our-web-hosting-service
எங்கள் இணைய  தளசேவை விவரங்கள் மற்றும் கட்டணங்கள் பற்றிய முகவரி
http://inventran.com/cheap-linux-hosting-plans

Sakthi Ganesh M
Mobile : +91 9994833115

எங்கள் பதிவுகள் உங்களுக்கு பிடித்திருக்குமாயின் கீழ்கண்ட இணையதளங்களில் எங்கள் பதிவுகளுக்கு உங்கள் ஓட்டினை தவறாது பதிவு செய்யுங்கள். இதை செய்வதன் மூலம் நீங்கள் இப்பயனுள்ள செய்திகள் நிறைய தமிழ் வாசகர்களை சென்றடைய உதவுவதுடன் , வரும்காலத்தில் நிறையபதிவுகளை உங்கள் பார்வைக்கு அளித்திட எங்களை ஊக்குவிப்பதாகவும் அமையும். நன்றி!

If you enjoyed this post, please consider to share this with your social network

If you have any questions,or you would like to say some thing? Share your comment here you can also Subscribe our blog posts on E-mailso that you will receive the future posts on your inbox,with out fail.

Comments

  1. prabhu says:

    Thanks For ur Comments

Speak Your Mind

*