முற்றம்.காம் தமிழில் ,தமிழருக்காய் ஒர் கருத்துக்களம்



கடந்த காலங்களில் எல்லா தமிழர்களின் வீடுகளிலும் முற்றம் என்றொரு பகுதி இருந்து வந்தது! முற்றம் பொதுவாக  உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன்  தகவல்களையும் ,  இனிய விடயங்களையும் பகிர்ந்து கொள்ளும் இடமாக இருந்து வந்ததது.

அதைபோலவே நம்முடைய முற்றம்.காம்ஆனது தமிழர்கள்  இணையத்தின் வாயிலாக தமிழில்  தங்கள் உணர்வுகளையும்  தாங்கள்  காணக்கிடைத்த முக்கிய  நிகழ்வுகளையும்  நண்பர்களோடும் ,மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடமாகும்.

முற்றம்.காம் தமிழுக்கான டுவிட்டர் என்று கூட குறிப்பிடலாம் ஏனென்றால் டுவிட்டர் வலைபின்னலில் உள்ள அத்துனை சிறப்பு   அம்சங்களும் இதில் உண்டு. அது மட்டுமல்லாது  இதன் வாயிலாக  படங்கள்,ஒளித்தடம் அகியவற்றையும் பகிர்ந்து கொள்ள முடியும். டுவிட்டர் போல் அல்லாது முற்றம் , முழுமையாக  தமிழுக்கென்றே  ‍ தமிழ்  எழுத்துருவில் தகவல்களை பகிர்ந்து கொள்ள உருவாக்கப்பட்ட வலைபின்னல் ஆகும்.

முற்றம்.காம் சிறப்பம்சங்கள்

  • தகவல்கள் மட்டுமல்லாது  இணைய முகவரிகள்,படங்கள், ஒளித்தடங்கள் போன்றவற்றையும் பகிர்ந்த்து கொள்ள முடியும்.
  • உங்களுக்கான குழுவினை உருவாக்கவும் மற்றவர்கள் குழுவினில் இணைந்து கொள்ளவும் முடியும்.
  • உங்களுக்கு பிடித்தவர்களை தொடரவும், உங்களை தொடர்பவர்களை சேர்க்கவோ அல்லது நீக்கவோ முடியும்
  • இடுகைகள் வாயிலாக உங்கள் குறிப்பு தகவல்களை தானியங்கி முறையில்  பதுப்பிக்க முடியும்.
  • பிரபலமான மற்ற சமூக வலைபின்னல்களான ஜிமெயில்,டுவிட்டர்,பேஸ்புக் போன்றவற்றிலுள்ள தொடர்புகளை  எளிதாக உங்களுக்கான   வலைபின்னலில் இணைந்திட அழைத்திடும் வசதி!

தளத்தினில் இணைய விரும்பும்  தமிழ் வாசகர்கள் எனது இந்த அழைப்பினை முகவரியை பயன்படுத்தி இணைந்து கொள்ளலாம்

புதுமையான முயற்சிகளை எப்போதும்  வரவேற்று ஏற்கும் தமிழ் கூறும் நல் உலகம் , எங்களுடைய இப் புதிய இம்முயற்சியையும் வரவேற்று ஏற்கும் என நம்புவோம்.

தளம் குறித்த விமர்சனங்கள் மற்றும் அறிவுரைகளயும் இரு கரம் கூப்பி வரவேற்கிறோம்.

If you enjoyed this post, please consider to share this with your social network

If you have any questions,or you would like to say some thing? Share your comment here you can also Subscribe our blog posts on E-mailso that you will receive the future posts on your inbox,with out fail.

Speak Your Mind

*